கொஞ்சம் ஏமாந்தா... கபாலம் கழன்றிடும்!

வால்பாறை: வால்பாறையில், நடைபாதையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

வால்பாறை, சிறுவர் பூங்கா பகுதியில் நகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் கீழ் பகுதியில், நுாற்றுக்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விளையாட்டு மைதானத்தின் வழியாக தான் நடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், பள்ளி குழந்தைகள் முதல் முதியவர் வரை நடந்து செல்லும் பாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அந்த வழியாக நடந்து செல்லும் போது அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி விளையாட்டு மைதானம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மைதானத்தை ஒட்டி மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, கீழ் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் ஆபத்தான பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement