கோகுலாஷ்டமி விழா 

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.

அதனையொட்டி, மாணவர்கள் பங்கேற்ற போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின், இணை தாளாளர் தீபா மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

மாணவ, மாணவிகள், பெற்றோர். பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் அமலக்குமார் நன்றி கூறினார்

Advertisement