கருப்பண்ண சுவாமி கோவில் பொங்கல் விழா

ஈரோடு:ஈரோடு பெரிய சேமூர் எல்.வி.ஆர்.காலனி கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்து வருகிறது.

இதை முன்னிட்டு, 8ம் தேதி மாலை காவிரி சென்று தீர்த்தம், கரகம், படைக்களம் எடுத்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலை அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், அபிஷேகம், ஆடு, கோழி வெட்டுதல், அன்னதானம் நடக்கிறது. 11 மதியம் மறுபூஜை நடக்கிறது.

Advertisement