குழந்தையுடன் பெண் 2வது மாடியில் தர்ணா

ஈரோடு:மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் பவித்ரா, 27; பிரசவத்துக்காக கணவர் கவுதம் ஓராண்டுக்கு முன் பவித்ராவை பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார். அதன் பின் வரவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை சொந்த வீட்டில் இரண்டாவது மாடிக்கு மேல் இருந்த சிமெண்ட் தொட்டி மீது கைகுழந்தையுடன் பவித்ரா ஏறினார். கீழே குதிப்பதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார். மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தாமோதரன் உள்ளிட்ட போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சென்றனு பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார். கணவனுடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளிக்கவே, குழந்தையுடன் கீழே இறங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement