டூவீலர் மீது லாரி மோதி விபத்து: இருவர் பலி
தேனி: தேனி அருகே டூவீலர் மீது மோதிய விபத்தில் பெரியகுளம் சருத்துப்பட்டி கார்த்திக் 19, லட்சுமிபுரம் லோகேஷ் பிரசாத் 19, பலியாகினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சருத்துப்பட்டி இந்திராகாலனி கார்த்திக். லட்சுமிபுரம் வடக்குதெரு லோகேஷ் பிரசாத், கைலாசபட்டி சிவதனுஷ் 16. இவர்கள் மூவரும் ஒரே டூவீலரில் தேனியில் இருந்து லட்சுமிபுரத்திற்கு சென்றனர். அன்னஞ்சி விலக்கு பகுதியை கடந்து சென்ற போது மழை பெய்தது. இதனால் மீண்டும் தேனிக்கு செல்ல டூவீலரை திருப்பினர். அப்போது தேனியை நோக்கி திருவண்ணாமலை சீனிவாசன் 30, ஓட்டிச்சென்ற லாரி டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் டூவீலரில் சென்ற கார்த்திக், லோகேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த சிவதனுஷ் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரி டிரைவரை கைது செய்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.