3 மாத உச்சத்தில் சேவைகள் துறை
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி கடந்த செப்டம்பர் மாதத்தில் முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
இது குறித்த ஹெச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் மாதாந்திர பி.எம்.ஐ., அறிக்கையின் படி, முந்தைய ஆகஸ்டில் 54.10 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த செப்டம்பரில் 55.20 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக, ஜூன் மாதத்துக்கு பிறகு சேவைகள் துறை மிக வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement