மாநில அளவிலான தடகளம் சேலம் மாணவர்கள் சாதனை
சேலம்: திண்டுக்கல்லில் நடந்த, மாநில அளவிலான தட-கள போட்டியில், சேலம் விளையாட்டு விடுதி மாணவர்கள், 9 பதக்கங்களை
வென்றனர்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 40வது மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி திண்-டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரியில் அக்.,2 முதல் 4 வரை நடந்தது.
இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சேலம் விளையாட்டு விடு-தியில் பயிற்சி பெற்று வரும் மாணவி தீப்தா சரனா, 16, ஐந்து விதமான போட்டிகளை கொண்ட, 'பென்டா' பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கோபிகா. 18, ஏழு வித-மான போட்டிகளை கொண்ட, 'ஹெப்டா' பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம்
பெற்றார்.
மாணவர் விஷால், 20, கம்பு ஊன்றி தாண்டுதல் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் மாணவர் ரோஹித், 18, கம்பு ஊன்றி தாண்டுதல் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மாணவி தன்-ஷிகா, 18, ஏழு விதமான போட்டிகளை கொண்ட, 'ஹெப்டா' பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
சாதனா, 18, உயரம் தாண்டுதலில், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், கம்பு ஊன்றி தாண்டுதலில், 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கார்த்திக்வாசன், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சஞ்சய்குமார் ஆகியோர் இரண்டாவது இடமும் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். மகாலட்-சுமி, 18, கம்பு ஊன்றி தாண்டுதலில் 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம்
பெற்றார்.
மாநில அளவிலான தடகள போட்டிகளில், சேலம் விளையாட்டு விடுதி மாணவர்கள், 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம், 9 பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணி தேவி
பாராட்டினார்.