தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி பேரணி; டில்லியில் ராகுல், பிரியங்கா கைது

8

-நமது டில்லி நிருபர்-

டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் எம்பி பிரியங்கா கைது செய்யப்பட்டனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரி, டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் கமிஷனின் அலுவலகம் நோக்கி, இண்டி கூட்டணி கட்சியின் எம்பிக்கள் பதாகைகளுடன் இன்று (அக் 06) பேரணியாக சென்றனர். அவர்கள் பார்லிமென்ட் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் எம்பி பிரியங்கா கைது செய்யப்பட்டனர்.

இந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் பலரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டனர். பார்லிமென்ட், இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகம் ஆகியவற்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து இந்தியத் தேர்தல் கமிஷனிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பாஜ நிராகரித்ததோடு, தேர்தல் கமிஷனுக்கு எதிரான இண்டி கூட்டணியின் பேரணியை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. அமைதியின்மை சூழலை உருவாக்குவதையும், ராகுலை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவதையும் இந்த பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது; தற்போது அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஜனநாயக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement