ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?
-நமது சிறப்பு நிருபர்-
பிளேக் நோய் கிருமி தாக்கி ரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வக ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த தொற்று பரவல் குறித்து ஒர் சிறப்பு அலசல்:
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் இர்குட்ஸ் மாகாணத்தில் பிளேக் நோய்க்கு எதிரான ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த தார்யா ஷிபிலோவா என்ற பெண் லேப் டெக்னீஷியன் எனப்படும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர், செப் 25ம் தேதி பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரித்து கொண்டு இருந்தார். அவர் உயிருள்ள பாக்டீரியாக்கள் இருந்த டெஸ்ட் டியூப் ஒன்றை தவறுதலாக உடைத்துவிட்ட நிலையில், பிளேக் நோய் தொற்று பரவியது.
கடுமையான நிமோனியா காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த அக் 1ம் தேதி உயிரிழந்தார். இந்த கொடிய நோய் தொற்று வேகமாக பரவும் என்பதால், தற்போது பரவலை தடுப்பது குறித்து அச்சம் அதிகரித்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு பிளேக் நோய் தொற்று இருந்ததா, அப்படியென்றால் அது இயற்கையாக ஏற்பட்டதா அல்லது ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட பாக்டீரியாவால் ஏற்பட்டதா என்பது குறித்து ரஷ்யா தரப்பில் ஏதும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆய்வின் போது நோய்க்கிருமிகளில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, ஆய்வக ஊழியர் உயிரிழந்தாரா என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் லேப் டெக்னீஷியனுடன் தொடர்பில் இருந்த சக ஆய்வாளர்கள் 200 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.
பரவுவது எப்படி?
பிளேக் நோய் தொற்று எலிகள் உள்ளிட்டவை மூலம் ஏற்படக்கூடியது. இந்த நோய் கிருமி வேகமாக பரவக்கூடியது மட்டுமல்லாமல், உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த நோய் தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர் அல்லது விலங்கு இருமும்போது, தும்மும்போது காற்றின் மூலம் பரவக்கூடியது. பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அறிகுறிகளில் மூச்சுத்திணறல், இருமல் அல்லது சளியில் ரத்தம் ஆகியவை அடங்கும்.
சிகிச்சை என்ன?
* இந்த நோய் தொற்றுக்கு என்டரோ பாக்டீரியாவுக்கான பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஆரம்பத்திலேயே கொடுத்தால், அவை இந்த நோயைத் திறம்பட குணப்படுத்த முடியும்.
* அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
* அலட்சியமாக சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமல், நோய் தொற்று பாதித்து 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
@block_Y@
நீண்ட வரலாறு!
பிளேக் நோய் தொற்று ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், ரஷ்யா உட்பட உலகின் பல பகுதிகளில் இன்றும் பரவியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை, 10 நாடுகள் 3,800க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு பிளேக் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு நாடுகளில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது, அவற்றில் பெரும்பாலானவை காங்கோ மற்றும் மடகாஸ்கரில் இருந்தன. தற்போது அக்.,1ல் ரஷ்யாவில் பெண் பெண் லேப் டெக்னீஷியன் பலியானதை தொடர்ந்து அச்சம் அதிகரித்துள்ளது.block_Y
@block_G@
கண்காணிக்கும் அமெரிக்கா!
அமெரிக்காவில் அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ மற்றும் நியூ மெக்சிகோ உள்ளிட்ட தென்மேற்குப் பகுதிகளில் நோய்த்தொற்று கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் விரைவாக சிகிச்சை பெற்று குணமடைகின்றனர். அமெரிக்காவில் பிளேக் நோயால் ஏற்படும் மரணங்கள் அரிதானவை, ஆனாலும் அவை நிகழ்கின்றன.
கடந்த ஜூலை மாதம், அரிசோனாவில் நோய்வாய்ப்பட்ட பூனையை வளர்த்து வந்த ஒருவர் பிளேக் நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மணி நேரத்திற்குள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட போதிலும், இறந்துவிட்டார். பின்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நிமோனிக் பிளேக் நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதுblock_G
சூரத் சம்பவம் மறக்க இயலாது எங்களால்மேலும்
-
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு
-
காட்டுயானைகள் முகாம்
-
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி
-
இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றிக்கு 1,008 படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு; வாலிபர் நுாதன செயல்
-
வறுமையில் வாடும் நகரவாசிகள்; ரிசர்வ் வங்கி சர்வேயில் அதிர்ச்சி தகவல்