விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் சேவையை துவங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்; சிறப்புகள் ஏராளம்!

1

நமது நிருபர்




நாட்டின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை வெளிப்படுத்தும் வகையில், விசாகப்பட்டினத்தில் நாட்டின் முதல் கடற்படை கப்பலான 'FSS-1'-ஐ மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார்.

இந்திய கடற்படையின் முதலாவது உள்நாட்டு ப்ளீட் சப்போர்ட் ஷிப் (Fleet Support Ship - FSS-1) போர்க்கப்பலான 'சூர்யா' இன்று (அக் 06) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் தளத்தில் சேவையை துவங்கியது. இந்த கப்பல் கட்டுமான பணி உள்நாட்டின் கப்பல் கட்டுமான திறனை பலப்படுத்தும் வகையில், கட்டுமானப் பணிகள் தொடங்கி வெறும் 18 மாதங்களிலேயே பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

43,500 டன் எடை கொண்ட இந்த கப்பல், கடலில் நீண்ட தூரம் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், குடிநீர், ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நடுக்கடலிலேயே வழங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 5 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இக்கப்பல்களின் கட்டுமானத்தை வேகப்படுத்த 'சிலிப்வே-4' (Slipway-4) மற்றும் 300 டன் எடையைத் தூக்கும் கிரேன் ஆகிய புதிய உள்கட்டமைப்புகளும் இன்று திறந்து வைக்கப்பட்டன.

இதன் மூலம் 45,000 டன் எடை வரையிலான பெரிய ரகக் கப்பல்களை இந்தியாவிலேயே எளிதாகக் கட்டமைக்க முடியும். இந்த கப்பலை துவங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசுகையில், ''இன்று, 'ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்'நிறுவனத்தில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் அனைவரையும் சந்தித்தது, இந்தியாவின் கடல்சார் திறன், நமது கடற்படை வலிமை மற்றும் சுயசார்பு இந்தியா மீதான நமது உறுதிப்பாடு ஆகியவற்றின் மீதான எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்று ஒரு மிக முக்கியமான நாள்'' என்றார்.

Advertisement