சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டில் ரெய்டு: ரூ.1.50 கோடிக்கு நகைகள் வாங்கியது அம்பலம்
திண்டுக்கல்: சிவகாசியில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜெகவீரபாண்டியனின் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.50 கோடிக்கு நகைகள் வாங்கிய ரசீதுகள் சிக்கியது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன். ராணுவ வீரரான இவர் விருப்ப ஓய்வுப் பெற்று தமிழக சுகாதாரத் துறையில் துணை இயக்குநராக சிவகாசியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பணிக்கான ஒப்பந்த தொகையை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகவீரபாண்டியனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான போலீசார் சின்னாளப்பட்டியில் உள்ள ஜெகவீரபாண்டியன் வீட்டில் நேற்று அதிகாலை 1:00 மணி வரை சோதனை நடத்தினர்.
இதில் ஜெகவீரபாண்டியன் அவரது மகள் பெயரில் ரூ.1.50 கோடி மதிப்பில் தங்க நகை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. கல்லுாரி மாணவியான அவரது மகள் எந்த பணிக்கும் செல்லாத நிலையில் ரூ.1.50 கோடிக்கு நகைகளை வாங்கியது குறித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது 2019 முதல் 2026 வரை வாங்கப்பட்ட தங்க நகைகள், ரசீதுகளுக்குரிய நகைகள் அனைத்தும் வங்கி லாக்கரில் இருப்பதாக ஜெகவீரபாண்டியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நகைகளுக்கான ரசீதுகளையும், வங்கி லாக்கருக்கான சாவியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
முன்னாள் ராணுவ வீரரை இப்படி என்றால் யாரை நம்புவது திராவிட மாடலில் பயிற்சி எடுக்கவில்லை போல அதுதான் ரசீதுடன் மாட்டிக் கொண்டார்
திருடர்கள் எல்லாமே சரியான பிறப்பு இல்லை. அது யாராக இருந்தாலும். ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் அவர் ஊழல்வாதி. அதற்க்கு அளவுகோல் இல்லை.
கண்டிப்பாக இவர் திருட்டு த்ரவிஷன்களின் அடிவருடி இல்லை என்பது தெரிகிறது. இல்லையென்றால் ஊழலின் மூலம் சேர்த்த பணத்தில் தங்கநகைகள் ரசீதுடன் வாங்கி வீட்டில் வைத்திருப்பாரா? ஊழல் விஞ்ஞானியின் பயிற்சி இல்லை