டிரைவரை காதலித்து கரம் பிடித்த மாணவி
தாரமங்கலம்:தாரமங்கலம்
அருகே தெசவிளக்கு ஊராட்சி லட்சுமாயூர் காட்டுவளவை சேர்ந்தவர்
டிரைவர் வினோத், 22. தெசவிளக்கு ஊராட்சி ஆரான் வட்டத்தை சேர்ந்தவர்
அமுதவள்ளி, 20.
இவர் ஓமலூர் அருகே தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி.,
சி.ஏ., 3ம் ஆண்டு படிக்கிறார். ஒரே பகுதியை சேர்ந்த இவருக்கும் பழக்கம்
ஏற்பட்டு, மூன்றாண்டாக காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர்
எதிர்ப்பு தெரிவிப்பர் என நினைத்து, இருவரும் கடந்த 2ல் வீட்டை விட்டு
வெளியேறினர்.
அன்று நங்கவள்ளி அருகே, பெருமாள் கோவிலில் திருமணம்
செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீசில்
நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரை அழைத்து
பேசியதில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காததால், இருவரையும்
அனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement