மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது

1

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி, மே.வங்கத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, இன்று(அக்.,09) நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம்; புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி; மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், சட்டசபை பொது தேர்தலை விட குறைவான ஓட்டுக்களே பதிவாகின.

மதுராந்தகத்தில், 85.9 சதவீதம், தாராபுரத்தில் 80.3 சதவீதம் ஓட்டுக்களும் பதிவாகியுள்ளன. மதுராந்தகத்தில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆத்துாரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தாராபுரத்தில் பதிவான ஓட்டுக்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட நான்கு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, இன்று காலை 8:00 மணிக்கு தொடங்குகிறது. இறுதி முடிவுகள், காலை 11:00 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement