நீர் சேமிப்புக்கு அணைகள் மட்டுமே தீர்வல்ல: உலகின் மிகப்பெரிய அணையான மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்!
கோவை: இந்தியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள நிலையில், அதிக நீரைச் சேமிக்க மேலும் பல அணைகளைக் கட்டுவது மட்டுமே தீர்வல்ல. இந்தப் பூமியிலேயே மிகப்பெரிய அணையாக இருக்கும் மண்ணின் னின் வளத்தை மேம்படுத்த வேண்டும்." என சத்குரு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்தியாவில் உள்ள 178 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு அதன் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும். கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பு 76.62 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 79 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பருவமழைப் பற்றாக்குறை காரணமாகத் தென்னிந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 87.25 சதவீதமாக இருந்த தென்னிந்திய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, தற்போது 50 சதவீதமாகச் சரிந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, "உண்மையான நீர்வளம் நமது காலடிக்குக் கீழேயே இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாகச் சேர்த்தால் கிடைக்கும் நீரின் அளவைவிட 800 சதவீதம் அதிக நீரைத் தேக்கி வைக்கும் திறன் மண்ணுக்கு உண்டு. ஆனால், இந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென்றால், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கும் மரங்கள், புதர்கள், கோடை காலப் பயிர்கள், நிலத்தை மூடியிருக்கும் தாவரங்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். அதிக நீரைச் சேமிக்க மேலும் பல அணைகளைக் கட்டுவது மட்டுமே தீர்வல்ல. இந்தப் பூமியிலேயே மிகப்பெரிய அணை மண்தான்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/SadhguruTamil/status/2105838762190368883
மேலும்
-
தமிழகத்தில் இன்று 23 மாவட்டம், நாளை 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
-
விவசாயத்தில் தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்தல் வரை… கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்!
-
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இணையசேவை; ஸ்டார்லிங்க் துணை தலைவர் உறுதி
-
சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O'
-
பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டும்
-
செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி