செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி

26

சென்னை: செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்குமே போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது எல்லாம் தவறான தகவல், அனுமதி உள்ள இடங்களில் போராட்டம் நடத்த போலீசா் அனுமதி அளித்து கொண்டு தான் இருக்கிறார்கள். முந்தைய ஆட்சி காலத்தில் சாலையோரத்தில் போராட்டம் நடத்த கூட அனுமதி இல்லாமல் தூய்மை பணியாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். நமது அரசு போராட்டம் நடத்த எந்த விதத்திலும் தடையை ஏற்படுத்துவது இல்லை.



என்ன வேலை?



செவிலியர்கள் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சருக்கு என்ன வேலை? மனோ தங்கராஜ் மாதிரியான நபர்கள் போய், உள்ளே உட்கார்ந்து திசை திருப்பி அரசியல் ஆக்கி, கலவர பூமியாக மாற்றுவதை போலீசார் அவர்களுக்கு புரிய வைத்தார்கள். செவிலியர் போராட்டத்திற்கும், திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் என்ன சம்மந்தம்? அவர் அந்த துறை அமைச்சராக இருந்தாரா? அரசு எப்படி மனோ தங்கராஜ் உடன் பேச்சு நடத்தும்.

கொள்முதல் ஏன்?



மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய மின்சாரம் வரவில்லை; பீக் ஹவர்சில் மின்சாரத் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதம் வரை மின் தேவை அதிகமாக இருக்கும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

Advertisement