இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இணையசேவை; ஸ்டார்லிங்க் துணை தலைவர் உறுதி

1

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் வணிக செயல்பாட்டு துணைத் தலைவர் லாரன் ட்ரையர் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது; சூரிய ஆற்றலை முழுமையாக பயன்படுத்த விண்வெளியில் மிகப்பெரிய அளவில் ஏஐ கட்டமைப்பை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. தற்போது சுற்றுப்பாதையில் உள்ள 11,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், உலகளவில் இணையதள சேவையை வழங்கி வருகின்றன.

இதுவரையில் 170 நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதே எங்களின் முக்கிய கொள்கை.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் விதிகளுக்கு ஏற்பட ஸ்டார்லிங்கின் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடு செய்துள்ளோம். 100க்கும் மேற்பட்ட 'ஆண்டெனா'க்களை அமைத்துள்ளோம். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இணையசேவையை வழங்கும் திறனை ஸ்டார்லிங்க் கொண்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement