சட்டம், ஒழுங்கு குழுக்கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு குழுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நிலவரம், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விவரங்கள், நிலுவை வழக்கு விவரங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

காவல்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தொடர்பாக கூட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பை வலுப்படுத்தி, விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

எஸ்.பி., மதிவாணன், துணை கலெக்டர் (பயிற்சி) ஹரிஷ், அலுவலக மேலாளர் (குற்றவியல்) சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement