ரஷ்யாவில் இருந்து டீசல் இறக்குமதி செய்கிறது அமெரிக்கா: அம்பலமானது இரட்டை நிலைப்பாடு
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு பெருமளவில் டீசல் வினியோகம் செய்ய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் உடனான மோதல், போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறி வருகிறது. இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
3 லட்சம் டன் டீசல்:
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் டிரம்ப், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசல் வழங்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மேலும் 5 லட்சம் டன்னும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக 10 லட்சம் டன் டீசலும் சப்ளை செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் விலைவாசி விரைவில் கட்டுக்குள் வரும். குறிப்பாக அமெரிக்க விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கச் செய்வதே எனது முதல் முன்னுரிமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
புதிய சர்ச்சை:
உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்ய டீசலை சர்வதேச சந்தைக்கு கொண்டு வர ஏதுவாக, அமெரிக்க நிதித்துறை தற்காலிக உரிமத்தை வழங்கி தளர்வு அளித்துள்ளது.
அமெரிக்காவில் விரைவில் பார்லிமென்ட் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், உள்நாட்டு ஓட்டுகளை கவரவே டிரம்ப் ரஷ்யாவிடம் இறங்கி வந்துள்ளார் என்றும், இது உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு மறைமுக நிதி திரட்ட வழிவகுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த ஒப்பந்தத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனம்
ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த போது, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உக்ரைன் மீதான போருக்கு இந்தியா தான் நிதியுதவி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்தியாவுக்கு கடுமையான அபராத வரியும் விதித்தது. ஆனால் தேசிய நலன்களை முன்னிறுத்தியே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா அறிவித்தது. இப்போது தங்கள் நாட்டுக்கு தேவையான டீசலை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
டிரம்ப் அறிவிப்பு வெளியான நிலையில், இந்தியாவுக்கு ஒரு நியாயம் அமெரிக்காவுக்கு ஒரு நியாயமா என வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏண்டா... நீங்கள் உங்கள் தேவைக்கு ரஷ்யா நாட்டிடம் பெட்ரோல்... டீசல் வாங்கலாம்... ஆனால் இந்தியா... அதன் 140 கோடி மக்களின் தேவைக்கு வாங்க கூடாது.... என்னங்கடா உங்க பித்தலாட்டம் !!!
US and the world will have peace and improvement in economy if and only if their present leader and his team get out of the scene replaced by better and peace loving efficient team.
Trump become anti India, because of jealous against Modiji. Trump is a sinking boat.
இதற்கு பெயர் தான் மொள்ளமாரித்தனம்.
கேவலமான அரசியல் வியாதிகள் போட்டியில் ராகுல்– டிரம்ப் இருவருக்கு மிடையேதான் போட்டி .
எல்லோரும் சுயநலம் பிடிச்ச சந்தர்ப்ப வாதிகள்.
தன் நலம் தன் சோறு நலம் என்று இருப்பவர்
இவன் இறக்குமதி பண்ணா தப்பில்ல? நம பண்ணா தப்பு/ அநியாய வரி! மன நோயாளி / சந்தர்ப்பவாதி என்ற நிரூபிக்கிறான்!மேலும்
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்தாண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…
-
தேர்வில் சாதிப்பது எப்படி?
-
மதிப்பெண் குறைந்தால் திட்டுவதா? பெற்றோர் அறிய வேண்டியவை
-
புதிய மொழி கற்போம்!