இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
கோவை: ''ராகுல் இந்தியாவை விட்டு வெளியே போய்விட்டாலே, இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தல்களும் இருக்காது. இத்தாலியில் போய் செட்டில் ஆக சொல்லுங்கள் '' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தவெகவுக்கு எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் இருக்கிறது. இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்; ஆனால் தவெக வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமான ஜனநாயகம் கிடையாது. இனிமேலாவது இரண்டு எம்எல்ஏக்களும் மக்களுடைய பிரச்னையை பார்க்க வேண்டும். எஸ்ஐஆர்-ஆல் தான் நாங்கள் ஜெயித்தோம் என்று கேரளாவில் உள்ள காங்கிரஸ் காரர்களே சொல்லுகிறார்கள்.
கிட்டத்தட்ட 12 கோடி பேருக்கு மேல் நீக்கி இருப்பது உண்மை தான். அதில் 2 கோடி பேர் இறந்துவிட்டனர். 20 ஆண்டுகளில் என் குடும்பத்தில் மட்டும் அம்மா, அப்பா , சித்தி என 8 பேர் இறந்துவிட்டார்கள். அதுபோல் இந்தியா முழுவதும் 2 கோடிக்கு மேல் இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அவர்கள் சொர்க்கத்திலும், நரகத்திலும் இருந்து கொண்டு இருக்கிறார்கள். ராகுல் என்ன சொல்கிறார் என்றால் அவர்களை எல்லாம் அழைத்து வந்து ஓட்டு போட சொல்கிறார்.
இவரை தான் அங்கு அனுப்பி அவர்களை கூப்பிட்டு வர சொல்ல வேண்டும். இன்றைக்கு சென்னைக்கு ராகுல் வருகிறார். முதல்வர் வீட்டில் சாப்பிடுவதாக சொல்கிறார்கள், முதல்வருக்கும் நேரம் வேஸ்ட். ராகுல் மக்கள் மத்தியில் நடிக்கிறார். பேரிகாட் மீது ஏறி நின்று சங்கிலி எல்லாம் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டு இருக்கிறார். முதலில்
ராகுல் இந்தியாவை விட்டு வெளியே போய்விட்டாலே , இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தல்களும் இருக்காது. இத்தாலியில் போய் செட்டில் ஆக சொல்லுங்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இவர் சுத்த யோகியர்
அப்பாடா நயினார் சரியாக சொல்கிறார்?
அது எப்படி சொல்லமுடியும்? இங்க இருக்கும்போதே அந்த ஆளு என்னென்ன வேலையெல்லாம் செய்யுறார்ன்னு உங்களால கண்டுபிடிக்கமுடியல்ல.
அவர் வெளிநாட்டுக்கு போயிட்டாருன்னா அங்கெ போயி யாரை சந்திக்கிறார், என்னென்ன சதித்திட்டங்கள் தீட்டுகிறான்னு சுத்தமா தெரியாம போயிரும்.மேலும்
-
பயிற்சியாளருடன் மோதல் விவகாரம்; ரொனால்டோவுக்கு 6 மாதம் தடை விதிக்க வாய்ப்பு
-
அதிகார அமைப்பின் மீது ராகுலுக்கு மரியாதை இல்லை; வெட்கக்கேடான விஷயம் என மத்திய அமைச்சர் காட்டம்
-
கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து வெளியேற்றிய போலீசார்
-
நண்பரிடம் ரூ.75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வாலிபருக்கு வலை
-
மரத்திலிருந்து விழுந்த ரயில்வே ஊழியர் சாவு
-
ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மீது வழக்கு