க. புதுப்பட்டியில் ஊத்துக்காடு பாலம் சேதம்: பள்ளி வானங்கள் சிரமம்

கம்பம்: கம்பம் புதுப்பட்டியில் ஊத்துக்காடு ரோட்டில் பாலம் சேதமடைந்துள்ளதால் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றன.

கம்பம் புதுப்பட்டி நெடுஞ்சாலையில் இருந்து ஊத்துக்காடு செல்லும் ரோட்டில் ஆரம்பத்தில் தரைப் பாலம் உள்ளது. இப் பாலத்தை கடந்து தான் ஊத்துக்காடுக்கு செல்ல வேண்டும். கம்பத்தில் உள்ள பல பள்ளிகளில் படிக்கும் புதுப்பட்டி மாணவ மாணவிகளை ஏற்றி வர, இந்த பாலத்தை கடந்து தான் பஸ்கள் சென்று வர வேண்டும். விவசாயிகள் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாலத்தில் மையப் பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாலம் சேதமடைந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்களும், பள்ளி வாகனங்கள் தவித்து வருகின்றனர்.

உடனடியாக இந்த பாலத்தை புதுப்பிக்க புதுப்பட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement