கரப்பான் பூச்சியை அழிக்காமல் விட்டால் ஆபத்து!

109



@block_Y@

- அர்னாப் கோஸ்வாமி -



நிறுவனர் & முதன்மை ஆசிரியர், ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்block_Y

block_B@மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் மக்கள் அவரவர் வேலையில் கவனமாக இருக்கிறார்கள். ஆங்கில நாளிதழ்களையும் சேனல்களையும் பார்க்கும்போது தான் டில்லியில் ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது. அது என்ன, ஏன், எப்படி என்று தமிழ் வாசகர்களும் தெரிந்துகொள்ள விரும்பினோம். அர்னாப் கோஸ்வாமி ஆர்வமாக முன்வந்தார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. கேள்வியின் நாயகன். 'நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது!' என்று தலைவர்களை அதட்டி பதில் பெற்று அறிவிப்பவர். பதில் சொல்ல முடியாதவர்களை ஓட விடுபவர். தமிழ் வாசகர்களுக்காக தினமலர் மேடைக்கு முதல் முறையாக வந்திருக்கிறார்.block_B

தமிழகத்தின் உன்னதமான மக்களுக்கு என் அன்பு வணக்கம்.

வரலாற்று சிறப்புமிக்க தினமலர் நாளிதழில் என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த ஆசிரியருக்கு நன்றி.

யாரையும் சார்ந்திராத, அதிகாரத்துக்கு தலைவணங்காத சுதந்திரமான இதழியலின் கலங்கரை விளக்கமாக தமிழகத்தில் தினமலர் தடம் பதித்த வரலாறை பெருமையுடனும் பிரமிப்புடனும் பார்த்திருக்கிறேன்.

கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் நமது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் போக்கு வளர்ந்து வருவது கவலை அளிக்கிறது. டில்லியில் ஒரு இடத்தில் சில ஆயிரம் பேர் கூடி, நாங்கள் தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கிறோம் என்று சொன்னால், அந்த பித்தலாட்டத்தை எதிர்கொள்வதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

அந்த சில ஆயிரம் பேர் தான் இந்தியாவா? தமிழக மக்கள் முக்கியம் இல்லையா? அசாம், மேற்கு வங்கம், குஜராத் என மற்ற மாநிலங்களின் மக்கள் பொருட்டே இல்லையா?

டில்லி தலைநகரமாக இருப்பதாலும், கரப்பான் பூச்சிகளுடன் சில யூடியூபர்கள், இன்ஸ்டாகிராமர்கள் கைகோர்த்து இருப்பதாலும், இந்திய ஜனநாயகத்தின் நெறிகளை நாம் கைகழுவ வேண்டுமா?

கரப்பான் பூச்சிகளும் அவர்களின் அரசியல் முதலாளிகளும் (முக்கியமாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ்) ஆட்சி மாற்றம் விரும்புகிறார்கள் என்பதற்காக, 2024 தேர்தலில் நாம் அளித்த ஓட்டுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று மக்களை குமுற வைக்க வேண்டுமா?

ஆரம்பத்தில் அவர்கள் அறிவித்ததை போல, கரப்பான் பூச்சி கட்சி வெறும் நையாண்டி அமைப்போ, இளைஞர் இயக்கமோ அல்ல என்பது இப்போது தெரிந்து விட்டது. நீட் தேர்வில் மத்திய அரசு செய்த தவறுகள்,இந்த கும்பல் மக்களை திரட்டுவதற்கான தூண்டுதலாக அமைந்தது. அது தப்பில்லை. மக்களை திரட்டுவது ஜனநாயக நடைமுறையே. ஆனால், திரட்டிய மக்களை வன்முறைக்கு தூண்டி மத்திய அரசை கவிழ்ப்பதே அவர்களின் நோக்கம் என்பது ஜூலை மாதம் புரிந்து விட்டது.

கரப்பான் பூச்சி தலைவர்களுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் உள்ள தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்தன அப்போது. மாணவர்கள், இளைஞர்கள் என்று சொல்லப்பட்ட கூட்டத்தில், கொலை முயற்சி, ரவுடியிசம், கற்பழிப்பு குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 2000 பேருக்கு மேல் கலந்திருந்த ரகசியம் அம்பலமானது.

குற்றவாளிகள் இணைந்த காரணத்தால், அந்த பகுதியை சுலபமாக அக்கூட்டம் சூறையாடியது; நேபாளத்தில் பார்லிமென்டை எரித்து ஆட்சியை கவிழ்த்தது போல, டில்லியிலும் வன்முறையை அரங்கேற்றி அரசை கவிழ்ப்போம் என்று பகிரங்கமாக பேசினார்கள். அந்த வன்முறையை அரசு ஏன் ஒடுக்கவில்லை என்று பலர் கேட்கிறார்கள். அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று தான் அந்த கும்பலும் எதிர்பார்த்தது. அப்படி நடந்தால், நாட்டின் மொத்த இளைஞர்களையும் அரசுக்கு எதிராக தூண்டிவிடலாம் என்று அவர்கள் வியூகம் அமைத்தனர்.

அந்த சதி வலையில் சிக்காமல், நிதானமாக செயல்பட்டு வன்முறையை அடக்கி நெருக்கடிக்கு முடிவு கட்ட அசாத்தியமான பொறுமை தேவை. நல்லவேளை, மத்திய அரசுக்கு அது இருந்தது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

நாம் கேட்க வேண்டிய கேள்விகள் இவைதான்:



உயர் அதிகாரிகள் உட்பட 118 காவல் துறையினர் கரப்பான்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தது தெரிந்தும், கரப்பானை ஆதரிக்கும் கட்சிகளில் ஒன்றுகூட வன்முறையை கண்டிக்காதது ஏன்?

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இதுவரை காணாத அளவில் வெளிநாட்டினர், குறிப்பாக அமெரிக்கர்கள், திரண்டதற்கு என்ன காரணம்?

கரப்பான் கட்சிக்கு சில நூறு கோடிகள் நிதி எப்படி வந்தது?

வன்முறை மிரட்டலையும், நாசவேலை அரசியலையும் கரப்பான் பூச்சிகளிடம் கைமாற்றி விட்டதால், அக்கட்சிகள் மவுனம் சாதிக்கிறதா?

அரசியல் ரீதியாக மக்களின் ஆதரவை திரட்டும் பாஜவின் சக்தியை நேர்மையான வழியில் எதிர்கொள்ள முடியாது என்று, மேற்கு வங்க தேர்தலுக்கு பின் அக்கட்சிகள் புரிந்து கொண்டதால் மவுனமா?

ஆம் ஆத்மி கட்சிதான் கரப்பான் பூச்சியை உருவாக்கியதா?

ஓட்டு அரசியலை விட நாசவேலை அரசியல் எளிதாக இருப்பதால் ஆம் ஆத்மியை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?

தமிழக மக்கள்சிந்திக்க வேண்டிய நேரம் இது.

மீண்டும் மீண்டும் தேர்தலில் தோற்கும் கட்சிகள், தேர்தல் நடைமுறையை கேள்வி கேட்க தொடங்கினால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசும் அதை கவிழ்ப்பதற்கான வன்முறை போராட்டத்தை சந்திக்க நேரிடும்.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர மறுஆய்வு 1960-ல் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இத்தனை காலம் அதை ஆதரித்த காங்கிரஸ், திடீரென்று சந்தேகிப்பது ஏன்?

கேரளத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதல, அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர். நடந்து முடிந்த கேரள தேர்தலில் SIR பெரிதும் பயன் அளித்தது என்று அவர் கூறுகிறார். ஆனால் அவரது கட்சி மேலிடம் வேறுமாதிரி பேசுகிறது.

தேர்தல் ஆணைய எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் இன்று நடப்பது, இந்தியாவின் ஜனநாயக அமைப்பை ஒழித்துக் கட்டும் முயற்சி தவிர வேறில்லை.

தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், பார்லிமென்ட் மற்றும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சிதைத்து அழிப்பதுதான் அவர்களின் நோக்கம்.

அதனால்தான், அவர்களிடம் சில எதிர் கேள்விகளை கேட்க வேண்டும்.

முடிவுகள் பார்லிமென்டில் அல்ல, வீதிகளில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறும் பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் போன்றவர்களிடம், காஷ்மீர், சட்டப்பிரிவு 370, முத்தலாக் ஆகியவை குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்க வேண்டும்.

பார்லிமென்ட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவை அவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று கேட்க வேண்டும்.

உமர் காலித் மற்றும் துக்டே துக்டே கும்பலின் உறுப்பினர்களை அவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று கேட்க வேண்டும்.

மோடி அரசு பாகிஸ்தானை தாக்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் ஏன் ஆதாரம் காட்டு என்று பாகிஸ்தான் போலவே பேசுகிறார்கள் என்று கேட்க வேண்டும்.

நமது தேசிய பாதுகாப்பு நலன்களில் விட்டுக் கொடுக்குமாறு அமெரிக்கா தரும் அழுத்தத்தை எதிர்த்து மோடி அரசு போராடும்போது, அவர்கள் ஏன் மத்திய அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் என்று கேட்க வேண்டும்.

மிக முக்கியமாக, மதமாற்றம் செய்வதற்காக வெளிநாட்டுப் பணம் பெறுவதை தடுக்கும் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை (FCRA) அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று கேட்க வேண்டும்.

கரப்பான் பூச்சி கட்சியும் அதன் ஆதரவாளர்களும் மற்றவர்களிடம் வெளிப்படை தன்மையை எதிர்பார்க்கிறார்களாம். அப்படியானால் இங்கே நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அவர்களே அதை தொடங்கட்டும்.

நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது, தமிழகத்தின் உன்னதமான மக்கள் இந்த விஷயங்கள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

எங்கள் ரிபப்ளிக் டிவியை தமிழிலும் கொண்டு வருவதன் மூலம் தமிழக மக்களுக்குச் சேவை செய்ய விரைவில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தமிழக மக்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அனுமதித்த தினமலர் குழுமத்திற்கும் ஆசிரியருக்கும் ஆதிமூலம் அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Advertisement