இந்திய கம்யூ., போராட்டம் தாசில்தார் சமரசத்தால் வாபஸ்
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ஊராட்சி அலுவலகம் இன்று நடக்க இருந்த சவப்பாடை ஊர்வலம், தாசில்தார் சமரசத்தால் வாபஸ் பெறப்பட்டது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பட்டியலின மக்களின் சுடுகாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரும காரிய கொட்டகை கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த செப்.18 ம் தேதி ஆர்.டி.ஓ., தலைமையில் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதனை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் இன்று 23ம் தேதி காலை சி.என்.பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் சவப்பாடை ஊர்வலம் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (அக்.,22) மாலை கடலுாரில் தாசில்தார் ராஜேஷ்பாபு தலைமையில், பி.டி.ஓ., பாண்டியன் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்திய கம்யூ.,மாவட்ட நிர்வாக்குழு குளோப்,வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கருமகாரிய கொட்டகை கட்ட முன்மொழிவு தயார் செய்து அனுப்பப்படும் எனவும், பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக பி.டி.ஒ., பாண்டியன் தெரிவித்தனர். மயான எரிக்கொட்டகை அமைந்துள்ள இடத்தில் புறம்போக்கு இடம் கண்டறியப்பட்டு, இடுகாடு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனையேற்று, இன்று நடைபெற இருந்த சவப்பாடை ஊர்வலம் கைவிடப்பட்டதாக இந்திய கம்யூ., கட்சியினர் அறிவித்தனர்.