சந்தை துளிகள்

ரீட்ஸ், இன்விட்ஸ்: செபி சிறப்பு அனுமதி

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளான 'ரீட்ஸ்' மற்றும் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளான 'இன்விட்ஸ்' டிரஸ்ட்டுகளை, மூன்றாம் தரப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என்று செபி பரிசீலித்து வருவதாக செபியின் செயல் இயக்குநர் மனிந்தர் சீமா தெரிவித்துள்ளார்.

என்.சி.டி.இ.எக்ஸ்., சந்தையில் ஈக்விட்டி குறியீடுகள் அறிமுகம்

கமாடிட்டி வர்த்தக சேவைகளை வழங்கி வரும் 'என்.சி.டி.இ.எக்ஸ்.,' நிறுவனம் முதல்முறையாக 'என்.டி.இ.எக்ஸ்.,' மற்றும் 'பின்.டி.இ.எக்ஸ்.,' ஆகிய இரண்டு ஈக்விட்டி குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 'பெஞ்ச்மார்க்' என்.டி.இ.எக்ஸ்., குறியீட்டில் 20 முன்னணி லார்ஜ்கேப் பங்குகளும், பின்.டி.இ.எக்ஸ்., குறியீட்டில் 15 நிதித்துறை (இன்சூரன்ஸ் தவிர) பங்குகளும் இடம்பெறுகின்றன.

இந்தியா சிமென்ட்ஸ் பங்கு விலை 22% உயர்வு

'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனம் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, நிகர லாபம் நான்கு மடங்கு உயர்ந்து 38.82 கோடி ரூபாயாக உள்ளது. இதனால், இந்தியா சிமென்ட்ஸ் பங்குகளின் வர்த்தக அளவு கணிசமாக அதிகரித்து, கடந்த இரண்டு நாட்களில் பங்கு விலை கிட்டத்தட்ட 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சுந்தரம்மியூச்சுவல் பண்டுஎஸ்.ஐ.எப்., தொடங்குகிறது

'சுந்தரம் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் 'செலக்ட் ஈக்விட்டி எக்ஸ்-டாப் 100 லாங் ஷார்ட் பண்டு' என்ற எஸ்.ஐ.எப்., திட்டத்தை தொடங்கி உள்ளது. என்.எப்.ஓ., வெளியீட்டில் 350 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான என்.எப்.ஓ., வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.Latest Tamil News

Tamil News
Tamil News

Advertisement