எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் ரூ.75 ஆயிரம் உயர்வு; அரசாணை வெளியீடு
சென்னை: எம்.எல்.ஏ.,க்களின் மாத ஊதியத்தை, 1.05 லட்சம் ரூபாயில் இருந்து 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாத ஊதியமாக 1.05 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, அவசர கால மருத்துவ செலவிற்கு 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 'எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்கப்படும். இதற்காக டிரைவர் மற்றும் எரிபொருள் செலவிற்கு, 75 ஆயிரம் ரூபாயும், அலுவலக உதவியாளரை நியமித்து ஊதியம் வழங்க, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்' என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவதற்கு, 15 லட்சம் ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக இந்த தொகை விடுவிக்கப்படவுள்ளது. டிரைவர், எரிபொருள், உதவியாளர் ஊதியம் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் மாத ஊதியம் 1.80 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
You do not need any qualification to become an mla.you get 25000 rs.Graduates with engg medical degrees hardly get 10000 rs.
கடந்த ஐந்து மாதங்களில் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு மிக மிக மீழே வாழ்வாதாரம் இன்றி தவித்த 234 பேர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்த வள்ளல் விசயப்பா வாழ்க
திமுக எம்.எல்.ஏ க்கள் இந்த சம்பள உயர்வை புறக்கணிப்பார்கள்.
என்ன கிழிக்கிறாங்கன்னு..... சம்பள உயர்வு?
எழுபது சதவீத சம்பள உயர்வா ? நாடு விளங்கிடும்
ஏற்கனவே மக்கள் வரிப்பணத்தை லஞ்சம் ஊழல் மூலமாக கொள்ளை அடிப்பது போதாதென்று இது ஒரு சட்டபூர்வமாக மக்கள் வரிப்பணத்தை வாரிச்சுருட்டும் வாய்ப்பு. இதை எந்த எதிர் கட்சிகாரனும் எதிர்த்து கேட்க மாட்டார்கள்.ஏனென்றால் இது அவர்களுக்கும் கிடைக்கிறதல்லவா? அரசியல் என்பதே பணம் கொழிக்கும் ஒரு தொழில் என்பதாலேயே ஊரில் உள்ள பல வெந்ததும் வேகாததும் அரசியலில் குதித்து மக்கள் சேவை என்ற பெயரில் மக்களை சுரண்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த லட்சனத்தில் இவர்களுக்கு தகுதி இல்லா சலுகைகளை அதுவும் கஜானா காலி என்று கூறி கொண்டு இருக்கும் இந்த முதல்வர் வழங்குவது நாட்டை சுரண்டும் மற்றும் ஒரு செயல். அறிவித்த பிறகும் அரசாணைகளை திரும்ப பெறுவதை செய்யும் இந்த முதிர்ச்சி அற்ற அரசு இதையும் திரும்ப பெற வேண்டும்.
That is not a lie. Data can prove this. For this reason only Tamilnadu forced to take loan. You should question TVK as they said "kazhana" is empty. How come they are giving freebies now.?
பல கோடி சம்பளம் கொடுத்தலும் லஞ்சம் வாங்கி கொண்டு தான் இருப்பார்கள் இந்த அரசியல் வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என்ற......
இவர்கள் மக்கள் வரிப்பணத்தை சட்டபூர்வமாக கொள்ளை அடிக்க மேலும் ஒரு வாய்ப்பு. இதை எந்த எதிர் கட்சிகாரனும் எதிர்த்து கேட்க மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் பொருந்தும். பணம் கொழிக்கும் ஒரு தொழில் அரசியல் என்பதாலேயே ஊரில் உள்ள பல வெந்ததும் வேகாததும் அரசியலில் மக்கள் சேவை என்ற பெயரில் மக்களை சுரண்டி சம்பாதித்து கொண்டு இருக்கின்றனர். இந்த லட்சனத்தில் இவர்களுக்கு தகுதி இல்லா சலுகைகளை கார்,சம்பள உயர்வு,படி உயர்த்தி வழங்குவது இந்த முதல்வர் விஜய் அறிவித்த மற்றும் ஒரு foolish முடிவு. அவ்வப்போது அரசாணைகளை திரும்ப பெறுவதை செய்யும் அரசு இதையும் திரும்ப பெற வேண்டும்.
தமிழ்நாட்டு நிதிநிலைமையை கருத்தில் கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த சம்பள உயர்வு தங்களுக்கு வேண்டாம் என்று எழுதிக்கொடுக்கணும் கொடுப்பார்களாமேலும்
-
சவுதி அரேபியாவில் இருந்து பாதுகாப்புடன் நாடு திரும்பிய உம்ரா யாத்ரீகர்கள்; மத்திய அரசு அறிவிப்பு
-
புதிய வரலாற்றுச் சாதனை; ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களை பெற்றது ஜியோ ஐபிஓ!
-
வலுவான இந்தியாவை கட்டியெழுப்ப இளைஞர் சக்தியை வளர்க்க வேண்டும்; பிரதமர் மோடி
-
டிரம்ப் மருமகன் வங்கிக்கணக்கிற்கு ரகசியமாக வந்த பணம்: நெதர்லாந்து உளவு அமைப்பு பகீர் குற்றச்சாட்டு
-
சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசுக்கு அறிவுரை கூற தகுதி கிடையாது; பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்
-
ராகுலுக்கு அரசியல் ஞானம் இல்லை; பாஜ விமர்சனம்