பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 2.36 லட்சம் கோடி அபராதம்

1

வாஷிங்டன்: 'பேஸ்புக்' சமூக வலைதள பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ரகசிய தகவல்களை தவறாகப் பயன்படுத்திய வழக்கில், அதை நடத்தும், 'மெட்டா' நிறுவனத்துக்கு, 2.36 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்து நியூ மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த, 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' என்ற அரசியல் ஆலோசக நிறுவனம், 8.7 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி திரட்டியது.

இது தொடர்பாக, 2021ல் நியூ மெக்சிகோ மாகாண அட்டர்னி ஜெனரல் ராகுல் டோரஸ், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மெட்டா நிறுவனம், 43 லட்சத்திற்கும் அதிகமான முறை மீறியதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்க கார்ப்பரேட் வரலாற்றில் பதிவான மிகப் பெரிய அபராதங்களில் இது ஒன்றாகும்.

Advertisement