புதிய வரலாற்றுச் சாதனை; ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களை பெற்றது ஜியோ ஐபிஓ!
-நமது சிறப்பு நிருபர்-
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், பங்குச் சந்தையில் முதன்முறையாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வழங்கும் திட்டமே ஜியோ ஐபிஓ. ரூ.30,200 கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் மெகா ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான ஐபிஓ விண்ணப்பங்களை பெற்று, உலகிலேயே ஐபிஓவிற்கு அதிக விண்ணப்பங்களை பெற்ற நிறுவனம் என்ற சாதனையை எட்டியுள்ளது. வாரீ எனர்ஜீஸ் லிமிடெட் பெற்ற, 97 லட்சம் விண்ணப்பங்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்து உள்ளது. ஜியோ ஐபிஓவிற்கு இன்றிரவு (அக். 23) 7 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தற்போதைய நிலவரப்படி, இந்த மெகா ஐபிஓ ஒட்டுமொத்தமாக 18 மடங்குக்கும் மேல் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1.35 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொது முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.4.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகவும், வங்கிகள், இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட், வெளிநாட்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட 'ஆங்கர்' முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகமாகவும் பங்குகள் கோரி பதிவுகள் வந்துள்ளன. அக்டோபர் 26 (திங்கள் கிழமை) அன்று உங்களுக்குப் பங்குகள் கிடைத்துள்ளதா என்பது தெரியவரும். பங்குகள் கிடைக்காதவர்களுக்கு அக்டோபர் 27 அன்று பணம் திரும்பப் பெறப்படும்.
ஜியோ ஐபிஓ சாதனை
* ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ நேரம் முடிவில், பங்குகள் கோரிய முதலீட்டாளர்களின் விண்ணப்ப பதிவு ரூ.7 லட்சம் கோடியை கடந்துள்ளது.
* உலக அளவில் ஒரு கோடியை கடந்த முதல் ஐபிஓ இது தான்.
* இந்திய கார்ப்பரேட் நிறுவன வரலாற்றில் ரூ.30,213 கோடி என்ற அளவில் வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஐபிஓ., இதுதான்.
* 100 சதவீதமும் முதன்மை பங்குகளை புதிதாக வெளியிட்ட மிகப்பெரிய ஐபிஓவும் இதுதான்.
* ஐபிஓ தொடங்கிய முதல் 100 நிமிடங்களுக்குள் 100 சதவீதம் விண்ணப்ப பதிவை எட்டியதும் ஒரு சாதனை
* மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை இரண்டுமே கூடுதல் பதிவு நேரம் அனுமதித்த முதல் ஐபிஓ.,வும் இதுதான்
அமைதிமார்க்கத்துக்கு பொய் செய்திகள் என்றால் அல்வா சாப்பிடுவது போல அதே சாட்டிலைட் உரிமம் ஜியோ மற்றும் ஏர்டெல்க்கும் கிடைக்காமல் இருக்கிறது நாட்டின் பாதுகாப்பு விஷயகளால் கொடுக்காமல் இருக்கிறார்கள்
பல்லாண்டுகாலமாய் தொலைத்தொடர்பு தொலைபேசி துறையில் இருந்துவரும் அரசு நிறுவனமான BSNL 5G license கேட்டு 5 ஆண்டுகள் காத்திருக்க, நேற்றுவந்த அம்பானியின் jio 2021இல் உடனே உரிமம் பெற்றது எதனால் ?
சிறு முதலீட்டாளர்கள் போடும் பணத்தில் 2 சதவீத லாபம் கிடைப்பது கூட கஷ்டம்.
எங்கள் அம்பானியை கிண்டல் செய்த மஸ்க், பாத்தியா எங்க ஆட்டத்தை .. எங்க கால் தூசி கூட இல்ல நீ
ஸ்டார்லிங்க் எப்படியாவது வந்துவிடும் என்று அம்பானிக்குத் தெரியும் ..... வந்துவிட்டால் ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல் இவையெல்லாம் படுத்துவிடும் .... அதனால்தான் சொந்தக்காசையே போட்டு ரிஸ்க் எடுத்து விரிவாக்காமல் மக்களிடம் திரட்டுகிறார் .....
ப்ரோ, என்ன ப்ரோ. எங்க அம்பானி, எங்க ஆட்டம். அம்பானி வீட்டு பக்கமோ, மஸ்க் வெட்டுப்பக்கமோ நாம பாக்க கூட முடியாது. இதுல நீங்க அம்பானியை சொந்தம் கொண்டாடுறிங்க. உலகத்துல உள்ளவன் இல்லாதவன்னு ரெண்டே குரூப்தான் உண்டு ப்ரோ. மித்தபடி மதம், அரசியல் கொள்கை எல்லாமே ஏமாத்து வேலை ப்ரோ
எதற்கெடுத்தாலும் அம்பானி அதானியைத் திட்டும் நல்ல உள்ளங்கள் பெரும்பாலும் முதலீடு செய்திருக்கும்.அம்பானி ஒழிக ஜீ ஒழிக.ஆனால் அவர்கள் நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்வோம்
உண்மை. முற்றிலுமாக உண்மை!
நேரு நெருனு ஒருத்தர் நேருவை ஒரு பொதுநிகழ்ச்சி இல்லாம தூற்றுவாராம், அனால் வருடத்திற்குஒரு பொதுத்துறை நிறுவனம் நேரு ஆரம்பித்த பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத்தள்ளுவராம். அதுமாதிரில இருக்கு சீவலத்தூர் ப்ரோமேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி