மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்

28

திருச்சி: தமிழகத்தில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு புறநகர் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் வெற்றிப் பயணம்' திட்டம் கடந்த 2ம்தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் 80 கிலோ மீட்டர் துாரம் வரை புறநகர் பகுதிகளில் இலவச பயணம் என்றிருந்தது. இப்போது 120 கி.மீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பஸ்களில் வருவாய் இன்றி செலவுகள் மட்டும் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தனயார் பஸ்களின் இயக்கமும் தடுமாற தொடங்கியுள்ளது.

நஷ்டம் அதிகரிப்பு

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசப்பயணம் திட்டமான 'விடியல் பயணம்' திட்டம் கொண்டு வரப்பட்டபோது, தனியார் பஸ்களுக்கு லேசான தடுமாற்றம் இருந்தது. எனினும் அத்திட்டத்தில் பஸ்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சமாளித்துக்கொண்டனர். தவெக ஆட்சி வந்த பிறகு, 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் புறநகர் பஸ்களில் 80 முதல் 120 கிலோ மீட்டர் தூரம் வரை இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அரசு பஸ்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு, நஷ்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், 20 நாட்களுக்கும் மேலாக தனியார் பஸ்களுக்கு 50 சதவீதம் வருவாய் குறைந்துள்ளதோடு, தனியார் பஸ் உரிமையாளர்கள் தினமும் குறிப்பிட்ட தொகை லாபமாக ஈட்டி வந்த நிலையில், தற்போது தினமும் ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை கையில் இருந்து செலவு செய்ய வேண்டியுள்ளது.

தனியார் பஸ் நிறுவனங்களை சார்ந்து டிரைவர், கண்டக்டர், கிளீனர் என நேரடியாக 50 ஆயிரம் தொழிலாளர்களும், மெக்கானிக், பஸ்பாடி தொழிலாளர்கள், பெட்ரோல் பம்ப் தொழிலாளர்கள், பெயின்டர்கள் என மறைமுகமாக ஏராளமான தொழிலாளர்களும் உள்ளனர்.

வெற்றி பயணத்திட்டதால், தனியார் பஸ்களின் வருவாய் குறைந்துள்ள தால், 3 லட்சம் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இலவச பயணத்தால், இரவு நேரத்தில் தனியார் பஸ்களுக்கு பயணிகள் எண்ணிக்கை குறையும். அந்த டிரிப் பையே அவர்கள் நிறுத்தி வருகின்றனர். இதனால், இரவு நேர சேவையும் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும்.

என்ன தீர்வு?

தமிழக அரசின் திட்டத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்க்க வில்லை. அதேசமயம், திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளால், அதே துறையை சார்ந்த மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் அரசு முதலில், 'வெற்றிப்பயணம்' திட்டத்தில் பயனாளிகளை தகுதி அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும்.

* ரேஷனில் அரிசி வாங்கும் தகுதியுடைய பச்சை நிற ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மட்டும் வெற்றிப் பயணத்திட்டத்தில் இலவச பயணம் என்று வரையறுக்க வேண்டும். அவர்களுக்கு, கர்நாடகா வில் உள்ளது போன்று ரேஷன்கார்டு, ஆதார் இணைப்புடன் கூடிய வெற்றிப்பயணம் பாஸ்' வழங்க வேண்டும். இதன் மூலம், வசதி படைத்த, இலவசம் தேவையில்லாத பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

* காஞ்சிபுரம்-பூந்தமல்லி- சென்னை வழித்தடத்தில் உள்ள 46 அரசு பஸ்களும், திருச்சியில் இருந்து துறையூர் வழித்தடத்தில் 14 அரசு பஸ்களும் இலவச பஸ்களாக்கப்பட்டுள்ளது. இது போன்று மாநிலம் முழுவதும் பல வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ்களின் நிலை என்னவாகும். எனவே ஒரு வழித்தடத்தில் 30 சதவீதம் வரை மட்டுமே இலவச பஸ்களை இயக்க வேண்டும்.

* இலவச பயணத்துக்கான தொலைவையும், அதிகபட்சம் 40 கிலோ மீட்டராக நிர்ணயிக்க வேண்டும்.

* 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத தனியார் பஸ் கட்டணத்தை, பிற மாநிலங்களுக்கு நிகராக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

* டீசல் விலை உயரும் போதெல்லாம். பைசா கணக்கில் கட்டணத்தை உயர்த்தினால் மக்களுக்கு சுமையாக இருக்காது.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உறுதுணை யாக பொது போக்குவரத்து சேவை வழங்கும் தனியார் பஸ்கள் இயக் கத்தை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், தனியார் பஸ் தொழிலும், அதனை சார்ந்த சார்பு தொழில்க ளும் முடங்கி, 3 லட்சம் தொழிலாளர்களின் குடும் பங்கள் பாதிக்கப்படும்.

* கடைசியில், அரசு போக்குவரத்துக் கழகம், காலப்போக்கில் ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவ னத்திடம் ஒட்டுமொத்த மாக வழங்கப்பட்டு, இப்போது' பயணிக்கும்.

* இலவசத்துக்கு எல்லாம் சேர்த்து வட்டியும், முதலுமாக கட்டணம் செலுத்தி பஸ்களில் செல்ல வேண்டியிருக்கும் அபாய நிலைமை உருவாகும் என்பதே நிதர்சனமான உண்மை.

@block_G@

இப்படி இருந்தால்தான்...



இந்தியாவில் பொதுபோக்குவரத்தில் அதிக பயணிகளை கையாளும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 200 பஸ் களும், தனியார் மூலம் 7 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்தை பொறுத்தவரையில், அரசு பஸ்கள் 75 சதவீதமும், தனியார் பஸ்கள் 25 சதவீதமும் இருந்தால் மக்களுக்கு முழுமையான சேலையை வழங்க முடியும்.block_G

@block_P@

அடுத்த வேதனை ஆரம்பம்



புறநகர் பஸ்களில் இலவச பயணம் என்பதால், கிராமப்புறங்கள், சிறு நகரங்களில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஜவுளிகள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை சாமான்கள் வாங்குவதற்கு உள்ளூர் கடைகளை விட்டு, அருகிலுள்ள பெருநகரங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், உள்ளூர் சிறு, குறு வியாபாரிகளுக்கான வியாபாரம் குறைந்துள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இப்பிரச்னை, விரைவில் விஸ்வரூபமெடுக்கும்.block_P

Advertisement