தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அச்சம்

காஞ்சிபுரம்: சாமந்திபுரம் கிராம சாலையோரம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள சாமந்திபுரத்தில் இருந்து சிறுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையோரம் மின்வழித்தடம் செல்கிறது. இந்த மின்வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement