ஓடும் காரில் தீ

சேலம்:சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன். இவர், 'ஹோண்டா' காரில், நேற்று மாலை கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே வந்தபோது, கார் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. ஓரமாக நிறுத்திப்பார்த்தபோது, தீப்பற்றி எரிந்ததால் உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன், தீயை அணைத்தார். சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அணைக்கப்பட்டு விட்டது.

Advertisement