உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்; தீபாவளி, சத் பூஜைக்கு மக்களுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி வலியுறுத்தல்

6

புதுடில்லி; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டின் 'மக்கள் சக்திக்கு' தலைவணங்குகிறேன். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுடன் இணையவும், அவர்களில் ஒருவனாக உரையாடவும் வாய்ப்பளிக்கிறது. நேயர்களின் இந்த அன்பு எனக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷம். 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி திருநாளில் துவங்கப்பட்ட இந்த பயணம், மக்களின் பேராதரவோடு தொடர்ந்து வெற்றிகரமாகத் பயணித்து வருகிறது.

மறுமலர்ச்சி

கடந்த 12 ஆண்டுகளாக, மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம், பலரது கவனத்திற்கும் வராமல் போகும் தனித்துவமான பணிகளை மேற்கொள்ளும் எண்ணற்ற சாதனையாளர்களின் உத்வேகமளிக்கும் நிகழ்வுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. பஞ்சாபில், 'கேதி விராசத் மிஷன்' திட்டம் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய வேளாண் நடைமுறைகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

நமது நாட்டின் பாரம்பரியத் திறன்கள் பல தலைமுறைகளாக நமது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. உலகிலேயே முதல் முறையாக, மூளை இமேஜிங் தொழில்நுட்பத் தளத்தை சென்னை ஐஐடி சுதா கோபாலகிருஷ்ணன் ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது; இதில் மனித மூளையின் உயர் தெளிவுத்திறன் கொண்ட 3டி படங்கள் உருவாக்கப்படுகின்றன.

இம்மாத தொடக்கத்தில் சென்னை சென்றிருந்தேன். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், திறமைசாலிகள் என பலரை சந்தித்தேன். எனது சென்னை பயணத்தில் மெட்ரோவில் இளைஞர்களுடன் உரையாடினேன். அப்போது இளைஞர்களின் சக்தியானது, பல்வேறு பிரச்னைகளுக்கு நூதனமான தீர்வுகளை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை காண முடிந்தது. ஐஐடியில் நடந்த உரையாடல் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாக இருந்தது.

இயற்கை சாகுபடி

பஞ்சாபின் மால்வா பகுதியில் நவ த்ரிஞ்ஜன் முன்னெடுப்பு மூலம் ரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வண்ணப் பருத்தி மூலம் நூல் மற்றும் துணிகளும் வேறு எந்தவொரு வேதிப்பொருளையும் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்கவில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தனை பெரிய உதவியாக இருக்கிறது என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உறுப்பு தானம்

உறுப்பு தானத்தை மக்கள் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்; உயிர்களைக் காப்பாற்றவும், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவும் உதவும்; ஆயுஷ்மான் திட்டம் மக்களுக்குச் சிறந்த சுகாதார வசதிகளைப் பெறுவதற்கு உதவியுள்ளது. அக்டோபர் 31ல் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் தினத்தில் ஒற்றுமைக்கான மாரத்தான் ஓட்டத்தில் மக்கள் உற்சாகமாகப் பங்கேற்க வேண்டும்; இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும்; நாட்டிற்கான மக்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

தீபாவளி வாழ்த்துக்கள்

மக்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் . என் அன்பு நாட்டு மக்களே, வரவிருக்கும் நாட்கள் தீபாவளி, சத் பண்டிகை மற்றும் பல கொண்டாட்டங்கள் வருகின்றன. ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும், இந்தப் பண்டிகைகளை உங்கள் முழு குடும்பத்துடன் கொண்டாடுங்கள். உங்கள் மகிழ்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வரவிருக்கும் பண்டிகைகளுக்காக உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement