வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
- நமது நிருபர் -
வழக்கத்தை விட பிரகாசமாகவும், சற்று பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கும் 'ஹண்டர்ஸ் மூன்' இன்று இரவு வானில் தோன்றுகிறது.
இலையுதிர் காலத்தின் முதல் முழு நிலவுக்கு அடுத்ததாக வரும் முழு நிலவு, 'ஹண்டர்ஸ் மூன்' என அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு, உணவைச் சேமித்து வைப்பதற்காக விலங்குகளை வேட்டையாட நிலவொளியைப் பயன்படுத்தியுள்ளனர். அறுவடை முடிந்த வெட்டவெளியில் விலங்குகள் நடமாடுவதை நிலவொளியில் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்ததால், இந்நிலவுக்கு 'ஹண்டர்ஸ் மூன்' என்ற பெயர் உருவானது.
அதிக பிரகாசம்:
இந்த முழு நிலவு அடிவானத்தில் தோன்றும் போது அடர்ந்த ஆரஞ்சு அல்லது செந்நிறத்தில் காட்சியளிக்கும். வழக்கமாக பவுர்ணமிக்கு அடுத்தடுத்த நாட்களில் நிலவு தோன்றுவதில் தாமதம் ஏற்படும். ஆனால், இந்த வேட்டைக்காரன் நிலவு சூரியன் மறைந்த உடனேயே வானில் உதயமாகி, இரவு முழுவதும் பிரகாசமான வெளிச்சத்தை வழங்கும்.
நிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுடன் இந்த பவுர்ணமி இணைவதால், இது வழக்கமான நிலவை விட பெரியதாகவும், அதிக ஒளி வீசியும் தென்படும்.
எப்படிப் பார்ப்பது?
மாலையில் சூரியன் மறைந்த சிறிது நேரத்தில், பிரம்மாண்டமான ஆரஞ்சு நிற நிலவை வெறும் கண்ணாலேயே ரசிக்கலாம். தொலைநோக்கி தேவை இல்லை.
சூப்பர்மேலும்
-
பத்திரம் எழுதுவோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
அ.தி.மு.க., ‘மாஜி’ அமைச்சர் ஆதரவாளர்களை கட்டம் கட்டி வரும் பொதுச்செயலாளர்: மயிலம் தொகுதியில் கட்சியினர் ‘குமுறல்’
-
சிவகங்கையில் மழைக்கு வீடுகள் சேதம்: 4 ஆடுகள் பலி
-
திருவாடானை வாரச்சந்தை சேறும் சகதியாக மாறியது
-
சாலை, பஸ் வசதியின்றி பள்ளி மாணவர்கள் அவதி, வீடு கிடைக்காமல் துப்புரவு பணியாளர்கள் தவிப்பு: குறை தீர்க்கும் கூட்டத்தில் குவிந்த புகார்கள்
-
விளையாட்டு வினையானது, துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் கவலைக்கிடம்: நெய்வேலியில் பரபரப்பு