பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு

1

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவின் மூத்த மகன் பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிளாவியோ போல்சோனரோ அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராவார்.

பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு, பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் தேர்தலில், லுலா டா சில்வா 51.21 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். போல்சோனாரோ 48.79 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரேசிலின் அதிபராக தொடர்ச்சியாக 4வது முறையாக தேர்வாகியுள்ளார்.

இந்த வெற்றியை லூலாவின் ஆதரவாளர்கள் ரியோ டி ஜெனிரோ, சாவ் பாலோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் மீண்டும் இடதுசாரி ஆட்சி தொடர்கிறது. இந்த ஆட்சியில் அமெரிக்காவுடனான வர்த்தகக் கொள்கைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

@block_G@

வாழ்த்துக்கள்!



பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், '' என் அன்பு நண்பர், அதிபர் லூலா பெற்ற மகத்தான மறுதேர்தல் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தவும், நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். நாம் இணைந்து, பல்வேறு துறைகளில் உறவை தொடர்ந்து வலுப்படுத்துவோம். அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் நிலையான ஒரு உலகத்தை நோக்கிப் பணியாற்றுவோம்'' என குறிப்பிட்டுள்ளார். block_G

Advertisement