நகைக் கடையில் ரூ. 7 லட்சம் 12 தாலி சரடுகள் ‘அபேஸ்’
புதுடில்லி: நகை வாங்குவது போல நடித்து, ஏழு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவரை போலீசார் தேடுகின்றனர்.
கிழக்கு டில்லி வினோத் நகரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று முன் தினம் மதியம், 12:00 மணிக்கு ஒருவர் வந்தார். விதவிதமான நகைகளை பார்வையிட்டு விலை விசாரித்தார். ஆனால், நகை எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றார். அவர் சென்றவுடன் நகைகளை மீண்டும் எடுத்து உள்ளே வைத்த போது, 55 கிராம் எடையுள்ள 12 தங்க தாலிச் சரடுகள் காணாமல் போனது தெரிய வந்தது.
உடனடியாக அந்தப் பகுதி முழுதும் கடை ஊழியர்கள் தேடிப் பார்த்தும், வாடிக்கையாளர் போல வந்து சென்ற நபரை பிடிக்க முடியவில்லை. கடை உரிமையாளர் விஷால் குமார், மண்டாவலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
விரைந்து வந்த போலீசார், கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!