கேரளாவில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய காரால் விபரீதம்; விபத்தில் முதியவர் பலி
இதுபற்றிய விவரம் வருமாறு;
கேரளாவின் கொச்சியில் ஜெயபாலகிருஷ்ணன் (55) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
ஸ்கூட்டரில் அவர் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த சொகுசு கார் மோதியது. விபத்தில் ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்றும், நீதிபதி ஒருவரின் மகன் என்பதும் தெரிய வந்தது. மது போதையில் அவர் கார் ஓட்டி வந்தாரா என்பது தெரியவில்லை. போலீஸ் காவலுக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான்.
இதையறிந்த நீதிபதி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். அவரிடம் பாதிக்கப்பட்ட ஜெயபாலகிருஷ்ணனின் உறவினர்கள், 17 வயது சிறுவனை எப்படி கார் ஓட்ட அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் அங்குள்ளோரை கண்ணியக்குறைவாக பேசியதாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிபதி மைனர் மகனால் விபத்து என்றாலும் போலீஸ் அதிகாரிகள் எப்படி மறைக்காமல் தகவல் கசிய விடுகிறார்கள். முன்சீப், மாவட்ட நீதிபதி.. போன்று தெளிவாக கூறுக. மேலும் போலீஸ் வருவாய் அதிகாரிகள் ஒரு குடிமகனை அடையாள படுத்தும் முன் விசாரிக்க முடியாது. இது வரை நாடு முழுவதும் போலீஸ் அதிகாரம் கீழ் மக்களை நேரடியாக சோதித்த நீதிபதிக்கு சத்திய சோதனை.மேலும்
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!