தமிழக ஆசிரியர் கூட்டணி கொடியேற்று விழா

அவிநாசி: அவிநாசி வட்டாரக்கிளை தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின், 44வது ஆண்டு கொடியேற்று விழா நடந்தது.

வட்டார செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டாரக்கிளை தலைவர் ஜெகநாதன், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். மகளிர் அணி செயலாளர் செல்வி, முன்னாள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். வட்டார துணைச் செயலாளர் திருப்பதிசாமி நன்றி கூறினார்.

Advertisement