கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல் தம்பதிக்கு வலை
திருத்தணி: கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி – அரக்கோணம் சாலையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 44. இவரது கணவர் பண்டரி, அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்திருந்தார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், உடல்நலம் பாதிக்கப்பட்டு பண்டரி இறந்துவிட்டார். இதையடுத்து, வெல்டிங் கடை மற்றும் உபகரணங்களை, வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்த திவாகர், 43, என்பவருக்கு, தமிழ்ச்செல்வி வாடகைக்கு கொடுத்திருந்தார்.
அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகளுக்கு முன், திவாகருக்கு கடனாக, 84 ஆயிரம் ரூபாயும் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு, திவாகரிடம் தமிழ்ச்செல்வி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திவாகர், அவரது மனைவி சாந்தி ஆகிய இருவரும், தமிழ்ச்செல்வியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திவாகர், சாந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி