கமுதி,முதுகுளத்துார் பகுதிக்கு அக்.,29ல் கூடுதல் அரசுபஸ் இயக்க கோரிக்கை
முதுகுளத்துார்: தேவர் குருபூஜை விழாவையொட்டி, கமுதி,முதுகுளத்துார் பகுதிகளில் அக்.,29ல் பள்ளி,அரசு அலுவலங்கள் செல்வதற்கு வசதியாக கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவையொட்டி அக்.,29ல் முதுகுளத்துார், கடலாடி, கமுதி உள்ளிட்ட இடங்களில் இருந்து மக்கள் பசும்பொன் சென்று வர வசதியாக கிராமங்கள் தோறும் பஸ்வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ் அந்தந்த கிராமபகுதிக்கு இயக்கப்பட்டது. இதனால் முதுகுளத்துார்,கமுதி பகுதியில் போலீசார் தங்கிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது. மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகிறது. அதேபோல் அரசு அலுவலங்கள் இயங்கியது. கடந்தாண்டு கமுதி, முதுகுளத்துார், கடலாடி பகுதியில் ஒருசில அரசு, தனியார் பஸ்கள் மட்டும் இயங்கியதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர்கள், அரசு அதிகாரிகளும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வாடகை வாகனங்கள் செல்லும் அவலநிலை ஏற்பட்டது.எனவே இந்தாண்டு முன்கூட்டியே மக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி