பெரியாறு அணையில் தொடர்மழை நீர்மட்டம் 120 அடியை கடந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்மட்டம் 120 அடியைக் கடந்துள்ளது. தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பை அதிக படுத்தாமல் அணையில் கூடுதல் நீர் தேக்குவதற்கான நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும், இரவில் கன மழை பெய்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி தேக்கடியில் 28.8 மி.மீ., பெரியாறில் 14 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1090 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2736 மில்லியன் கன அடியாகும். 116 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் நேற்று காலை 120.55 அடியாக உயர்ந்தது. (மொத்த உயரம் 152 அடி). இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
விவசாயிகள் வலியுறுத்தல்:
அணை நீர்மட்டம் குறைவு காரணமாக கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு 2 மாதம் தாமதமாக ஆக., 8ல் திறக்கப்பட்டது. சமீபத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து முதல் போக சாகுபடிக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல் போகத்திற்கு பற்றாக்குறை ஏற்படாது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இரண்டாம் போக நெல் சாகுபடியும் துவக்க வேண்டுமானால் அணையின் நீர்மட்டம் உயர வேண்டும். அதனால் தற்போது அணையில் திறந்து விடப்பட்டுள்ள 400 கன அடி நீரை அதிகரிக்காமல் அணையின் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பை நீர்வளத் துறையினர் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றனர்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி