ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கி 45சவரன் நகை கொள்ளை: நாகை அருகே துணிகரம்
நாகப்பட்டினம்: நாகை அருகே வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து 45 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாய்மேட்டை சேர்ந்தவர் ஜெயராமன், 53, தனியார் பள்ளியில் வேன் டிரைவர்.இவரது மனைவி ஜெயந்தி, 43.தனியார் பள்ளி ஆசிரியை. கணவன் மனைவி இருவரும், தங்கள் குழந்தைகளை பற்றிக்கு அனுப்பிவிட்டு, தாங்களும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை பணி முடித்து ஜெயந்தி வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 45 சவரன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரியவந்தது. வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, நகைகளை திருடி சென்றுள்ளனர். மர்ம நபர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை சேதப்படுத்தி, கேமரா பதிவு சாதனங்களை எடுத்துச் சென்றிருந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், வாய்மேடு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி