மின்சாரம் தாக்கி மாடு பலி

அவலுார்பேட்டை: வளத்தி அருகே மின்சாரம் தாக்கி மாடு இறந்தது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த ஆர்க்காம்பூண்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.,25), அதே ஊரைச் சேர்ந்த மனோகரன் மனைவி தெய்வானை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ந்த காளை மாடு அங்கிருந்த மின்கம்பம் மீது உரசி நின்றபோது மின்சாரம் தாக்கி இறந்தது.

இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement