வெடிகுண்டு மிரட்டல் மாணவி பிடிபட்டார்
புதுடில்லி: டில்லி லோதி சாலை, ‘ஏர்போர்ஸ் பால பாரதி’ பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 23ம் தேதி இ–மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது. போலீஸ் நடத்திய சோதனையில் புரளி என உறுதி செய்யப்படது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர ஆய்வு நடத்தினர். அதே பள்ளியில் படிக்கும், 15 வயது மாணவி இந்த இ–மெயில் அனுப்பியதை கண்டுபிடித்தனர். அந்தச் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக இ–மெயில் அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார். சிறுவர் நீதி சட்ட பிரிவுகளின் கீழ், அந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!
Advertisement
Advertisement