‘உணவு சந்தை’யில் சாம்பார், குருமாவுக்கு ‘மவுசு’ இட்லி, சப்பாத்தியைவிட ‘சைடிஷ்’ விலை அதிகம்: சென்னையில் வேகமாக வளரும் புதிய உணவகங்கள்
சென்னை: இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை பிரதான உணவுகளாக இருந்த காலம் மாறி தற்போது, ‘சைடிஷ்’களே பிரதான உணவாக விற்பனை செய்யும், புதிய உணவக கலாசாரம், சென்னையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
உணவகம் என்றால் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் போன்ற உணவுகள் பிரதானமாக இருக்கும்.
அவற்றை வாங்குவோருக்கு, அந்த உணவுக்கு தேவையான சட்னி, சாம்பார், குருமா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக தேவைப்படுவோர், ‘சைடிஷ்’களை தனியாக வாங்குவர்.
அசைவ பிரியர்கள் சிக்கன், மட்டன் உணவுகளையும், சைவ பிரியர் ‘பனீர் பட்டர் மசாலா, வெஜ் குருமா, தக்காளி தொக்கு’ போன்ற, ‘சைடிஷ்’ உணவுகளை கூடுதல் விலைக்கு வாங்குவர். ஆனால், இந்த நடைமுறை தற்போது முற்றிலும் மாறியுள்ளது.
அதாவது, இட்லி, சப்பாத்தி போன்ற பிரதான உணவுகளின் விலை குறைக்கப்பட்டு, அவற்றுடன் சேர்த்து சாப்பிடப்படும் சாம்பார், குருமா, பனீர் பட்டர் மசாலா, சென்னா மசாலா உள்ளிட்ட ‘சைடிஷ்’களை, பிரதானமாக விற்பனை செய்யும், புது உணவக கலாசாரம் அதிகரித்துள்ளது.
இதனால், முன்பு உணவகங்களில் ‘சைடிஷ்’களாக மட்டுமே இருந்தவை, தற்போது விற்பனையின் பிரதான பொருட்களாக மாறியுள்ளன.
பெரு நகரங்களில், இந்த புது உணவக கலாசாரம், ‘டிரெண்ட்’ ஆகியுள்ள நிலையில், வேளச்சேரி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, முகப்பேர் உட்பட சென்னையின் முக்கிய பகுதிகளில், இந்த வகை உணவகங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இது போன்ற உணவகங்களில், பிரதான உணவாக, ஏதேனும் ஒன்று மட்டும் தான் விற்பனை செய்யப்படுகிறது. அது சப்பாத்தி அல்லது இட்லி போன்றவை, 6 முதல் 10 ரூபாய்க்கும், சாம்பார், குருமா, பனீர் பட்டர் மசாலா உள்ளிட்டவை, 25 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
‘ஸ்விகி, சொமாட்டோ’ போன்ற இணையவழி உணவுகளை விற்பனை செய்யும், ‘ஹோம் கிச்சன்’ மற்றும் பெரிய உணவகங்களில் மட்டுமே, நடைமுறையில் இருந்து இந்த கலாசாரம், தற்போது சாலையோர மற்றும் நடுத்தர உணவகங்களிலும், ‘டிரெண்டாகி’ உள்ளது. இது உணவு பிரியர்கள் இடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ராயப்பேட்டையை சேர்ந்த, ‘சப்பாத்தி கார்னர்’ உணவக உரிமையாளர் மோனிகா, வேளச்சேரியில் உள்ள ஆறு ரூபாய் இட்லி கடைக்காரர் ஸ்ரீநாதா ஆகியோர் கூறியதாவது:
சென்னையில் கணவன், மனைவி என, இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்கள் அதிகம் உள்ளன. காலையில் வீட்டில் இட்லி, தோசை உள்ளிட்ட பிரதான உணவு வகைகளை, விரைவாக தயாரித்து விடுகின்றனர்.
ஆனால், அதற்கு தேவையான சாம்பார், தக்காளி தொக்கு போன்ற ‘சைடிஷ்’களை தயாரிக்க நேரம் இருப்பதில்லை. இதேபோல் தான் மாலையிலும். இதனால், தற்போது சந்தையில் ‘சைடிஷ்’களுக்கு தனி தேவை உருவாகி உள்ளது.
ஒருவருக்கு தேவையான அளவு, இரண்டு பேர் சாப்பிடும் அளவு என, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, சாம்பார், குருமா, வெஜ் மசாலா குருமா உள்ளிட்டவற்றை பேக்கிங் செய்து விற்பனை செய்கிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@சென்னையில் அதிகரித்து வரும் ‘சைடிஷ்’ கலாசார மெனு:
உணவு (ஒருவர் சாப்பிடும் அளவு) –- விலை (ரூபாயில்)
சாம்பார் – 25
வெஜ் மசாலா குருமா – 25
தக்காளி தொக்கு – 25
சென்னா மசாலா குருமா – 45
பனீர் பட்டர் மசாலா – 70
சப்பாத்தி –- 7 முதல் 10
இட்லி –- 6
இவ்வாறு, ‘இட்லிக்கு சாம்பார்’ என்ற நிலை மாறி, ‘சாம்பாருக்கு இட்லி’ வாங்கும் அளவுக்கு, ‘சைடிஷ்’களுக்கே தனி சந்தை உருவாகி வருகிறது.block_B
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி