அன்னாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி மகா சித்தர் பீடத்தில், ஐப்பசி மாத அன்னாபிஷேக வைபவமும், புதிதாக பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் குறைதீர்க்கும் கருப்பர் சுவாமி உற்சவர் பிரதிஷ்டை வைபவமும் நடந்தது.

இப்பீடத்தில் எழுந்தருளியுள்ள வைத்தீஸ்வரர் உடனமர் மங்களாம்பிகை, ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ பால திரிபுரசுந்தரி அகத்தியர், போகர் உட்பட பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. விழா ஏற்பாடுகளை, மயூரம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.------

Advertisement