ஆலம்பூண்டியில் சிறுமி மாயமான வழக்கு ‘மாஜி’ ஊராட்சி தலைவரிடம் விசாரணை
செஞ்சி: ஆலம்பூண்டி சிறுமி மாயமான வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் மற்றும் சிறுமியின் உறவினர் இருவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கை கடந்த 22ம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று (அக்.,24) சிறுமியின் தந்தை வடிவேல், தாய் பவானி, பாட்டி சாந்தி ஆகியோரிடம் ஆலம்பூண்டி அரசு துவக்க பள்ளியில் தனி வகுப்பறையில் வைத்து டி.எஸ்.பி., கீதா 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
நான்காவது நாளாக இன்று (அக்.,25) காலை 11:00 மணிக்கு சிறுமியின் தாய் பவானியை செஞ்சி காவல் நிலையம் வரவழைத்து, அங்கு டி.எஸ்.பி., தனியாக 1 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2:00 மணியளவில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவரிடமும், பவானியின் உறவினர்கள் இருவரிடமும் ஆலம்பூண்டி அரசு துவக்க பள்ளி வகுப்பறையில் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.
சிறுமி மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் முதன் முறையாக குடும்பத்தினர் அல்லாதவர்களிடம் இன்று விசாரணை நடத்தினர்.
இதுவரை நடந்த விசாரணையில் உறுதியான துப்பு கிடைக்காத நிலையில், தாய் பவானியிடம் மீண்டும், மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் தரும் தகவல்களின் பேரில் உறவினர்களிடமும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி