புதுயுகம் பிறந்திருக்கிறது சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்

மீஞ்சூர்: “த.வெ.க., ஆட்சியால், தமிழகத்திற்கு புதுயுகம் பிறந்திருக்கிறது,” என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மீஞ்சூரில் த.வெ.க., சார்பில் நடந்த விழாவில், சபாநாயகர் பிரபாகர் பேசியதாவது:

அனைவராலும் பாராட்டும் ஆட்சியாக, த.வெ.க., ஆட்சி நடப்பதால், தமிழகத்திற்கு இப்போது, புதுயுகம் பிறந்துள்ளது. தேர்தல் நேரத்தில், புதிதாக ஒருவருக்கு ஓட்டு போடுவோம் என எண்ணி, முதல்வர் விஜய்க்கு மக்கள் ஓட்டளித்தனர்.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நல்லது நடக்க வேண்டும் என எதிர்கால சந்ததி விரும்புகிறது. இப்போது தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் விஜய் இந்தியாவே பாராட்டும் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement