பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் பைனலில் சிந்து ஏமாற்றம்; கொரிய வீராங்கனையின் தொடரும் ஆதிக்கம்
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிசில் நடந்து வருகிறது. இதன் பைனலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவருமான அன் சே யங்கும், இந்தியாவின் பி.வி.சிந்துவும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த முறை எப்படியும் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆட்டத்தின் போக்கோ தலைகீழாக மாறியது. அடுத்தடுத்த இரு செட்களையும் 11-21, 12-21 என்ற கணக்கில் அன் சே யங் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம், 11வது முறையாக தென்கொரிய வீராங்கனையிடம் சிந்து வீழ்ந்தார். இவருக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் தோல்வி என்ற மோசமான நிலையை சிந்து எதிர்கொண்டுள்ளார். இந்தாண்டில் மட்டும் 2 முறை மோதியுள்ளனர். சிங்கப்பூர் ஓபனின் காலிறுதியிலும், இந்தோனேசியா ஓபனின் 2வது சுற்றிலும் அன் ஷே யங்கே ஆதிக்கம் செலுத்தியுள்ளார். தற்போது, பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டனையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி