சேலம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த மாணவர்களால் அதிர்ச்சி
சேலம்: சேலம் அருகே, தண்டவாளத்தில் சரளை கற்களை வைத்த பள்ளி மாணவர்களை, ரயில்வே போலீசார் எச்சரித்தனர்.
ஈரோடு - சேலம் சரக்கு ரயில் நேற்று (அக்.,24) இரவு, 11:00 மணிக்கு, வீரபாண்டி - சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே வந்து கொண்டிருந்தது. சேலம், புத்துார் பகுதிக்கு வந்தபோது, ரயில் இயக்கத்தில் அதிர்வு உண்டாகி, பெட்டிகள் லேசாக குலுங்கின.
இதுகுறித்து, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார், அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இதில், 'அப் லைன் - டவுன் லைன்' தண்டவாளம் மீது, சரளை கற்கள் சுக்குதுாறாக உடைந்தபடி, அரை மீட்டருக்கு படிந்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அருகே உள்ள குடியிருப்புகளில் விசாரணை மேற்கொண்டனர்.
ரயில்வே போலீசார் கூறுகையில், 'சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 17 வயதுடைய, 3 மாணவர்கள், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவர் என, 4 பேரும் நேற்று முன்தினம் நெய்க்காரப்பட்டிக்கு வந்தனர்.
தண்டவாளம் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவர்கள், விளையாட்டு போக்கில், அங்கிருந்த சரளை கற்களை எடுத்து, தண்டவாளம் மீது இடைவெளி விட்டு வரிசையாக அடுக்கிவைத்து விட்டு சென்றனர்.
இதையடுத்து, அவ்வழியே வந்த சரக்கு ரயில் சக்கரத்தில் சிக்கி, சரளைகற்கள் உடைந்து, தண்டவாளம் மீது படிந்து கிடந்தது. சரளை கற்களை தண்டவாளத்தில் வைத்த மாணவர்களை வரவழைத்து, அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினோம்' என்றனர்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி