பைக் திருடியவர் கைது
குறிஞ்சிப்பாடி: தனியார் நிறுவன ஊழியரிடம் பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் தினேஷ், 28; தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த 23ம் தேதி, குறிஞ்சிப்பாடி சுப்பிரமணி செட்டி தெருவில், இவரது பைக் மாயமானது. இது குறித்து தினேஷ் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் குறிஞ்சிப்பாடி தேரடி அருகே இன்று (அக்.,25) காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற கொத்தவாச்சேரி, புது காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஸ்ரீகாந்த், 25; என்பவரை சோதனை செய்தனர். அதில் அவர், தினேஷின் பைக்கை திருடியது தெரிய வந்தது. ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
Advertisement
Advertisement