நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள ஆர்.எம்.டி.சி., நகர், அனுக்கிரஹா கல்லுாரி பகுதி, நல்லாம்பட்டி பிரிவு ஆகிய மூன்று இடங்கள் உட்பட இந்த ரோட்டில் முகப்பு விளக்கில் கருப்பு வில்லை (ஸ்டிக்கர்) இன்றி இயக்கப்படும் டூவீலர்களால் விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்படுவது தொடர்கிறது. எஸ்.பி., விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மெயின் ரோடாக திண்டுக்கல் நத்தம் ரோடு உள்ளது.
நாள்தோறும் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படாத டூவீலர்கள் அதிக, கட்டுப்பாடற்ற வேகத்தில் தினமும் சென்று வருகின்றன.
இப்பகுதியில் குறிப்பாக ஆர்.எம்.டி.சி., நகர், தனியார் கல்லுாரி அமைந்துள்ள அனுக்கிரஹா நகர் பகுதி, நல்லாம் பட்டி பிரிவு ஆகிய மூன்று இடங்கள் தவிர்த்து மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு, அதிகாலை நேரத்தில் டூவீலர்களில் முகப்பு விளக்கின் ஒளி அளவை எதிரே வரும் வாகன டிரைவர்களின் கண் கூசும் அளவிற்கு ஒளிரவிட்டு சென்று, விபத்துக்களுக்கு காரணமாவது தொடர்கிறது.
மூன்று மாதங்களில் 12க்கும் மேற்பட்ட டூவீலர் விபத்துக்கள் ஏற்பட்டு, வாலிபர்கள், வயதானவர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலை தொடராமல் டூவீலர்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதுடன், விபத்துக்களை தவிர்க்க எஸ்.பி., உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விபத்தில் உயிரிழந்தவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி