மழைநீர் வெளியேற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மழை பாதித்த பகுதிகளில் மோகன்தாஸ் எம்.எல்.எ., துணை கலெக்டர் குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஏம்பலம் தொகுதியில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. .

பாதிக்கப்பட்ட பகுதிகளை மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசன் குளம், ஆர்.கே.எஸ். நகர், பிள்ளையார் குளம் கிழக்கு தெரு, வி.ஓ.சி., நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருந்தை நெட்டபாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பொக்லைன் வரவழைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதே போல ஏம்பலம் அய்யனார் கோவில் வீதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததையும், பனித்திட்டு பகுதியிலும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபட்டது.

அப்போது, துணை கலெக்டர் குமரன், தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.

Advertisement